• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்ட போதும் தமிழக நலனில் அக்கறை காட்டுகிறார் – சி.பி.ராதாகிருஷ்ணன்

June 16, 2020

ஜமாத்தில் பங்குபெற்றதன் காரணமாகதான் கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவியது என சொல்லாமல் எதிர்கட்சிகள் தயங்கியது ஏன்?. எதிர்கட்சிகள் அரசு எடுக்கின்ற நல்முயற்சிகளை எதிர்க்கக்கூடாது, ஆளும் அரசின் தவறுகளை சுட்டி காட்டி நல்முயற்சிகளை வரவேற்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை, காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி கோவை மாவட்ட அலுவலகத்தில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் C.P.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைக் சந்தித்தனர்.

அப்போது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன்,

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஒர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மோடி தமிழ் பண்பாட்டின் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரியை தமிழகத்திற்கு தந்தவர் பிரதமர் மோடி. மதுரையில் எய்ம்ஸ் என்பது கணவு எனக்கூறிய நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 180 ஆக இருந்த கூலி 200 ஆக உயர்ந்துள்ளது. ஏழை,எளிய மக்களின் நலனில் அக்கரை கொண்டவர் மோடி. கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க பல கோடி மதிப்பில் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் காவிரி நீர் விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து கார்நாடக அரசு நீர் திறந்துள்ளது. நடுவர் மன்றம் அமைக்க மோடி தீவிர முயற்சி மேற்கொண்டார். நடுவர் மன்றம் தீர்ப்பு அமைய மோடி தான் முயற்சி மேற்கொண்டார்.

அதேபோல் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு 9.5 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், வீட்டு வேலை பார்பவர்கள் என பலருக்கும் நலவாரியம் மூலம் 3000 ஒய்வூதிய திட்டம். சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும் ரூ.145 கோடி சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டுள்ளது.சிறுவாணி ஆணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீர் கேரள அரசால் தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் அதை தட்டி கேட்காமல் நாதியற்று கிடக்குறார்கள். தமிழக மக்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். உலக ஒற்றுமை குறித்து பேசும் கம்யூனிஸ்ட்களிடம் ஒற்றுமையில்லை. மோடி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்ட போதும் தமிழக நலனில் அக்கறை காட்டுகிறார். சீனா ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போது பிரதமர் மோடி எதிர்த்து நின்றதால் சீனாவே பின்வாங்கியது. ஒர் ஆண்டு காலம் பிரதமர் மோடி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பொருளாதார ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒர் ஆண்டுகளாக விலை ஏற்றமே இல்லை. விரைவில் கோதவரி – காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பெட்ரோல் டிசல் விலையை ஜி எஸ்.டி கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம்.மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டிசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும். என்றும் தெரிவித்தார். சிறுவாணி அணை விவாகரத்தில் கேரளாவோடு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் பேசி தீர்க்க வேண்டும் என மாநில அரசு எண்ணுவதாகவும், மின்சாரம் இழப்பு என்பது மின்சாரம் திருட்டு மூலம் நடக்கிறது. இதனை தடுக்க அனைவரும் ஒன்றிய வேண்டும். அதில் விவசாயிகளும் ஒன்றிய வேண்டும். இலவச மின்சாரம் திட்டம் ஒரு போதும் ரத்து செய்யப்படாது. இலவச மின்சாரம் ரத்து என்பது தான், திமுகவின் அடுத்த பொய்பிரச்சாரம் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மேலும் கொரோனா இறப்பு விவகாரத்தில் புள்ளி விவரங்களில் சிறு பிழை இருந்துள்ளது. அதனை தமிழக அரசே ஒப்புக்கொண்டு அதனை சரிசெய்துள்ளது.ஆனால் ஜமாத்தில் பங்குபெற்றதன் காரணமாகதான் கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவியது என சொல்லாமல் எதிர்கட்சிகள் தயங்கியது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், எதிர்கட்சிகள் அரசு எடுக்கின்ற நல்முயற்சிகளை எதிர்க்கக்கூடாது, ஆளும் அரசின் தவறுகளை சுட்டி காட்டி நல்முயற்சிகளை வரவேற்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு விவகாரங்களில் தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது கொரோனா பரவல் சென்னையில் இருப்பதால் வழிப்பாட்டு தலங்களை திறக்க வேண்டாம் என தமிழக அரசு எண்ணுகிறது. அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க