• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடியை திருடன் என கூறியதற்கு உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வருத்தம்!

April 22, 2019 தண்டோரா குழு

ரஃபேல் விவகாரம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கசிந்த சில ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இது குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திருடப்பட்டஆவணங்களைஆதாரமாகக் கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. எனினும், மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இதற்கிடையில், இது குறித்து பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “மோடியை நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டது” என கூறினார். ராகுல் காந்தி யின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.ராகுலின் இந்த பேச்சுக்கு எதிராக பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், பாஜக எம்.பி. மீனாக்க்ஷி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனது வருத்தத்தைப் ராகுல் காந்தி பதிவு செய்தார். மேலும்,தான் தெரிவித்த கருத்தை எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரித்துவிட்டதாக ராகுல் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க