October 10, 2020
தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நலத்திட்டங்களின் தொடர் நிகழ்ச்சியாக கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் வசிக்கும் கால் டாக்சி,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி மூட்டை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
பாரத பிரதமர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ஜி அறிவுறுத்தலின் படி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் மாநில பொது செயலாளர் ஜி கே செல்வகுமார் ஆகியோரின் அறிவுரைப்படி பிறந்ததின நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை 58 வது வார்டு ஒண்டிப்புதூர் மண்டல் நீலிகோணம்பாளையம் பகுதியில் எழுபது ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு அரசி மூட்டைகளை மாநகர் மாவட்ட துணை தலைவர் பிரீமியர் பிரபாகரன் வழங்கினார். தொடர்ந்து அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு மைலோ ஆரோக்கிய சத்து மாவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத் முத்துக்குமார் ரவிச்சந்திரன் வேணுகோபால் செல்லையா, ஆட்டோ பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.