பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்றிதழ்களை பாஜக வெளியிட்டதன் மூலம் அவரது படிப்பு குறித்த சர்ச்சை தற்போது முடிவுக்குவந்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி கல்வி சர்ச்சைக்குரியதாக்கவே இருந்து வந்தது. இந்த நிலையில் மோடி பெற்ற பட்டங்கள் பற்றி டெல்லி முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையடுத்து இது குறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கும், குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து குஜராத் பல்கலைக்கழகம் மோடியின் கல்வி தகுதியை வெளியிட்டது. அதில் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி கடந்த 1983 ஆம் ஆண்டு முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 62.3 சதவீத தேர்ச்சியுடன் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார் என்று தெரிவித்தது.
மேலும், அவரது இளங்கலை படிப்பு குறித்த தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை தெரிவித்தது. எனவே, இளங்கலை இல்லாமல் எவ்வாறு ஒருவர் முதுகலைப் பட்டம் பெற முடியும் எனச் சர்ச்சை எழுந்தது.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய செயலர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மோடியின் முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு சம்பந்தமான சான்றிதழ்களை வெளியிட்டனர்.
அப்போது “பிரதமர் ஒருவரின் கல்வியறிவை தெளிவுபடுத்து வதற்காக நாங்கள் இந்தச் செய்தியாளர் சந்திப்பை கூட்டியுள்ளோம் என்பது மிகவும் துரதிஷ்டவசமானது, என்றார்.
மேலும், பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஏ. பட்டம் பெற்ற சான்றிதழையும், குஜராத் பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ. பட்டம் பெற்ற சான்றிதழையும் பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா முன்வைத்தார்.
அதைப்போல், மோடியின் பட்டம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்த அமித் ஷா, படிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராகக் குற்றச்சாட்டை சுமத்திய அரவிந்த் கெஜ்ரிவால் பொது மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
பின்னர் பேசிய அருண் ஜெட்லி, பிரதமர் மோடியின் படிப்பு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய ஆம் ஆத்மி தலைவர்களை அருண் ஜெட்லி கடுமையாக விமர்சனம் செய்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்