• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல – வேல்முருகன் எச்சரிக்கை

April 10, 2018 தண்டோரா குழு

மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் தமிழகமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டி நடைபெற்றால் வீரர்களை சிறை பிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதனால், இன்று போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் வித்துக்கப்பட்டுள்ளது. அதைப்போல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மேற்பார்வையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க