• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மைசூர் – பெங்களூருக்கு இடையே புதிய ரயில் சேவை

May 4, 2017 தண்டோரா குழு

மைசூர் – பெங்களுருக்கு இடையே மே 13-ம் தேதி முதல் மைசூர்-ஹுப்பாளி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதுக்குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ மைசூர் நகரிலிருந்து பெங்களூர் செல்ல ரயில் சேவை அமைக்க வேண்டும் என்று மக்கள் அதிக எதிர்ப்பார்ப்போடு இருந்தனர். அவர்களுடைய எதிர்ப்பார்ப்பு இந்த புதிய ரயில் சேவை மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் மைசூர் நகரிலுள்ள அசோகபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஹுப்பாளி ரயில்நிலையம் வரை இயங்கும். இது மைசூர் ரயில்நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் நகரின் கிரந்திவீரே சங்கொளி ராயனா ரயில் நிலையத்தை காலை 8.45 மணிக்கு வந்து சேரும்.” என்றார்.

ஒவ்வொரு நாளும் மைசூரிலிருந்து பெங்களூர் நகரத்திற்கு சுமார் 15,௦௦௦ மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். புதிய ரயிலுக்கான கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த புதிய ரயில் சேவையை, மைசூர் கோடாகு எம்.பி. பிரதாப் சின்ஹா மே 13-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவங்களில் பணிபுரியும் மக்கள் கூடுதலான ரயில் சேவை தேவைப்படுகிறது என்று ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க