June 10, 2020
தண்டோரா குழு
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆட்கள் மூலம் மிரட்டுவதாக பாதிக்கபட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற கடன்களுக்கு அதிக வட்டி வசூலிப்பதாகவும் உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் மூலம் மிரட்டுவதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினருடன் வந்து மனு அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வனிதா கூறுகையில்,
கிராம விடியல் மூலம் கொரோனாவிற்கு முன்பு கடன் பெற்றதாகவும் பணம் பெற்ற சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால் வருமானமின்றி இருந்து வரும் நிலையில் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்துமாறு நிர்பந்திப்பதாக தெரிவித்தார். தற்போது தான் அரசு விதிமுறைகளுடன் வியாபாரம் செய்ய அனுமதித்து உள்ள நிலையில் உடனடியாக பணத்தை செலுத்த வற்புறுத்துவது நியாமற்றது என்றார்.
மற்றொருவரான மகேஷ்வரி கூறுகையில்,
15 பேர் கொண்ட சுய உதவி குழுவில் யெஸ்.பேங்க் மூலம் 40,000 ரூபாய் கடன் பெற்று 15 தவணைகள் முறையாக செலுத்திய நிலையில் மீதம் 6 தவணைகள் உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக செலுத்த முடியவில்லை எனவும் இதற்கு அதிக வட்டி கட்ட சொல்லி வங்கி நிர்பந்தம் செய்வதாக தெரிவித்தார்.ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம்.வரை சிறுகுறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழக்கள்,விவசாய கடன் உள்ளிட்டவைகளுக்கு அசல் வட்டி வசூலிக்க கூடாது என்ற உத்தரவை மீறி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆட்களை வைத்து மிரட்டி பணம் வசூல் செய்வதாக குற்றம் சாட்டினார்.இவ்வாறான நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.