November 10, 2017
தண்டோரா குழு
கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நடிகர் கமலஹாசன் சந்தித்து பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக மொபைல் ஆப் ஒன்றை ஜனவரியில் வெளியிட உள்ளார். இதுமட்டுமின்றி மக்கள் தன்னுடன் தொடர்பு கொள்ள ஹேஸ்டேக்ககளை வெளியிட்டுள்ளார்.மேலும், கட்சி துவக்கத்தின் முன்னோட்டமாக கமல் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனையும் சென்னையில் உள்ள தனது வீட்டில் டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில்,கொல்கத்தாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் அங்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.