• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கமல்ஹாசன் !

September 23, 2017 தண்டோரா குழு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கவுள்ளார்.

சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் தமிழக அரசை விமர்சனம் செய்து வந்ததால், அரசிற்கும் கமலுக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தொடர்ந்து தான் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் தனி கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறிவரும் கமல் தமிழகத்தின் முதல்வர் ஆவேன் எனவும் கூறியுள்ளார்.மேலும், ரஜினியுடன் சேர்ந்து அரசியல் களத்தில் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், கமல், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் அரசியல் கற்றுக்கொள்வதற்காக சந்தித்தாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் பின் சென்னை வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கமலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கமல் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக கமல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க நேரம் கேட்டதாகவும், மம்தா பானர்ஜி அவருக்கு நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க