• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்குவங்க பள்ளிகளில் வங்காள மொழியை கட்டாயம் ஆக்கிய மம்தா பானர்ஜி

May 16, 2017 தண்டோரா குழு

மேற்குவங்க பள்ளிகளில் வங்காள மொழி கற்பித்தலைக் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஆட்சி புரிந்து வருகிறது. இந்நிலையில், அந்த அரசு பள்ளிகளில் வங்க மொழியை காட்டாயமாகியுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை மேற்குவங்க மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி வெளியிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மேற்குவங்க மாநில கல்வித்துறைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் வங்காள மொழி கற்பிப்பது இனி கட்டாயமாக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகளிலும்கூட இது பொருந்தும் என்றும் முதல் வகுப்பிலிருந்தே வங்காளம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வங்காள மொழியை இரண்டாம் அல்லது மூன்றாம் விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேற்குவங்க பள்ளிகளில் இதுவரை வங்காள மொழியை கட்டாயமாக மூன்று விருப்பப்பாடங்களில் ஒன்றாக கற்பிக்கும் முறை இல்லை. இந்நிலையில் தற்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க