• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமரிக்காவில் விசித்திரம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்!

June 28, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் கென்டுக்கி மாகணத்தில் உள்ள Rabbit Hash நகரின் மேயராக பிட்ச்புல் இனத்தை சேர்ந்த ஒரு நாயை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் கென்டுக்கி மாகணத்தின் நடந்த தேர்தலில் 3 வயது பிட்ச்புல் இனத்தை சேர்ந்த Brynneth Pawltro என்னும் நாய் 3,3௦௦ வாக்குகள் பெற்று அந்நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்படுள்ளது.

கடந்த 199௦களில் Rabbit Hash நகரில் வசித்த மக்கள், தங்களுக்கு மனித மேயர் யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்த அவர்கள், உண்மையான பிரதிநிதித்துவ ஜனநாயக பாணியில் விலங்குகளை தேர்வு செய்யத் தொடங்கினர். இந்த முறையை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

மேலும் அந்நாட்டில் வாழ்பவர்கள் ஒரு டாலர் செலவழித்து புதிய மேயரை தேர்ந்தெடுப்பர். தேர்தல் முடிந்த பிறகு, அந்த பணம் முழுவதும் மக்களுக்கே திரும்பி அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு, மின்சார தீ விபத்தில் சேதமடைந்த கடையை புதுபிக்க தேர்தல் பணம் செலவழிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க