• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாலிபர் முழுமையாக எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

February 6, 2021 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வாலிபர் முழுமையாக எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

மேட்டுப்பாளையம் ஓடந்துறை கிராமம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் (39) அவர் நேற்று இரவு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று எரிந்து நிலையில் கிடப்பதாக கூறினார். இதை அடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் சம்ஸ் போர்டு என்ற தனியாருக்கு சொந்தமான கல்லாறு சோதனைச்சாவடி அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த அந்த ஆண் சடலத்தை சென்று பார்த்தனர். அப்பொழுது அந்த ஆண் சடலம் ஒரு கால் தவிர உடல் முழுவதும் முழுமையாக கருகி போயிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.இதன் அடிப்படையில் போலீசார் இன்று விசாரணையை துவங்கியுள்ளனர்.

காட்டுப்பகுதிக்குள் எரிந்து கிடந்தவர் யார்? அவரை திட்டமிட்டு யாரும் எரித்துக் கொலை செய்தார்களா? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்கின்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க