• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையம் அருகே இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூட்டில் சிக்கியது

June 13, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மலை அடிவாரப்பகுதிகளில் நுழைந்து ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களை சிறுத்தை ஒன்று வேட்டையாடி வந்தது. சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் விசாய நிலங்களுக்கு செல்லவே அச்சமடைந்தனர். இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், கடந்த மாதம் வனத்துறை சார்பில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கபட்டு வந்த நிலையில், சிறுத்தை இருப்பது உறுதி செய்யபட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், சிறுமுகை வனத்துறையினர் சத்தியமங்கலத்தில் இருந்து கூண்டு கொண்டு வரப்பட்டு சென்னாமலை அடிவாரத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுமுகை வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக மீட்டு டெம்போ வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பல மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க