July 2, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கண்டியூரை அடுத்துள்ள ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை காதில் ரத்தம் வழிந்த நிலையில் காட்டு பெண் யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து,சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பிரேத
பரிசோதனை மேற்கொண்டனர்.
பிரேத பரிசோதனையில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டதில் மூளை சிதறி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், 2 செ.மீ அளவிலான குண்டு யானையின் காதுக்கு மேல் புறத்தில் துளைத்து மூளையில் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராமசாமி, கிருஷ்ணசாமி என்ற இருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.