• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை உள்பட 11 இடங்களுக்கு புதிய ரயில்கள்

April 17, 2017 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரைக்கு புதிய ரயில் உள்பட இத்தடத்தில் 11 புதிய ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் மேட்டுப்பாளையம் ரயில் தடங்களின் நீளத்தை அதிகரிக்க வேலைகள் நடந்து வருகிறது எனவும் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறியுள்ளார்.

சேலம் கோட்ட ரயில் உபயோகிப்போர் குழு ஆலோசனைக்கூட்டம் இன்று சேலம் கோட்ட அலுவலகத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமையில் நடைபெற்றது.

இதில் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த 21 உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.ஆலோசனைக்கூட்டத்தில் கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் ரயில் நிலைய கட்டிடப் பணிகள் குறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் கேட்ட போது, வரும் ஜுன் 2017 இறுதிக்குள் கட்டிடப்பணிகள் முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், பணிகள் நிறைவடைந்தவுடன், ரயில்நிலையம் செயல்படத் துவங்கும் என்றும் ஹரிசங்கர் வர்மா பதிலளித்தார்.

மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள போத்தனூர் – பொள்ளாச்சி அகல ரயில்பாதையில் ரயில்கள் இயக்குவது பற்றிய மற்றொரு கேள்விக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரைக்கு புதிய ரயில் உள்பட இத்தடத்தில் 11 புதிய ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றுள் நான்கு ரயில்கள் முந்தைய மீட்டர் கேஜ் தடத்தில் இயக்கத்தில் இருந்தவை என்றும் வர்மா கூறினார்.

மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு பற்றி சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறுகையில்

“ தற்போது மேட்டுப்பாளையம் ரயில் தடங்களின் நீளத்தை அதிகரிக்க வேலைகள் நடந்து வருகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைத்ததும் வேலைகள் முடிக்கப்பட்டு மேட்டுப்பாளையத்தை ஒரு முக்கிய ரயில்நிலையமாக ஆக்கப்படும்.,” என்றார்.

திருப்பூரில் பார்சல்களை ஏற்ற வசதியாக ரயில்களை மேலும் 5 நிமிடம் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைக்கு பதிளிலத்த அவர் ரயில்களை அட்டவணைப்படி இயக்க 5 நிமிடம் வரை மட்டுமே நிறுத்த முடியும். திருப்பூரில் தற்போது நிற்காத நாகர்கோவில், ஷாலிமார் விரைவு வண்டி போன்ற ரயில்கள் திருப்பூரில் நின்று செல்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது சலுகைக்கட்டண அட்டையை பயன்படுத்தி அனைத்து வகுப்புகளுக்கும் ரயில்நிலையங்களுக்கு செல்லாமலேயே இணையதளம் மூலம் பயணச்சீட்டு பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, பயணச்சலுகை அட்டையை பயனாளிகள் தவிர மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருக்க பயணச்சீட்டு அலுவலகத்திற்கு வந்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டி உள்ளது என்று வர்மா கூறினார்.

இதனிடையே சேலம் ஜோலார்பேட்டை தடத்தில் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடப்பது குறித்து உறுப்பினர்கள் கேட்ட போது, தமிழக ரயில்வே காவல் துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஒருவரை சேலத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும் படிக்க