• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் பட விளம்பரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

September 22, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜய் நடிக்கும் மெர்சல் படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி உலக அளவில் சாதனை படைத்தது. இதற்கிடையில், தயாரிப்பளர் ராஜேந்திரன் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 2014ம் ஆண்டே மெர்சலாயிட்டேன் என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். இப்படத்தை புதுமுக இயக்குனர் புதுமுக நடிகரை வைத்து இயக்கி வருகிறார். மேலும் தலைப்பை புதுப்பிக்கும் பணியையும் செய்து வருகிறேன். ஆகையால் விஜயின் மெர்சல் படத்தை விளம்பரம் செய்வது தவறானது எனக் குறிப்பிடிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. எனினும் படக்குழு சார்பில் அதிக அளவு பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தை விளம்பரப்படுத்த தடை விதிக்கக்கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி அக்டோபர் 3ம் தேதி வரை படத்தை விளம்பரபடுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும், அன்றைய தினத்திற்கே வழக்கை ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க