October 21, 2017
தண்டோரா குழு
மெர்சல் சர்ச்சை மனவேதனை தருகிறது என அப்படத்தின் தயாரிப்பளார் முரளி தெரிவித்துள்ளார்.
மெர்சல் பட சர்ச்சை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி. மெர்சல் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தன. அதை சரிசெய்து தீபாவளிக்கு படத்தை வெளியிட்டோம். ஆனால், படம் வெளியான சில தினங்களில் மீண்டும் பல சர்ச்சைகளுக்கு மெர்சல் உள்ளானது எங்களை மிகுந்த மனவேதனை அடைய செய்கிறது.
சாமானிய மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே மெர்சல் படத்தின் கரு. யாரையும் புண்படுத்தும் நோக்கில் நாங்கள் படம் தயாரிக்கவில்லை. பாஜகவினர் பார்வையில் அவர்களது எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்களை சந்தித்தோம். சர்ச்சைகள் குறித்த பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து படைப்பின் நோக்கத்தையும் விளக்கினோம். நேரில் சந்திக்கும் எங்கள் முடிவை பாஜகவினர் பாராட்டினார்கள்.நாங்கள் அளித்த விளக்கத்தை பாஜகவினர் ஏற்றுக்கொண்டார்கள். தவறான புரிதலை ஏற்படுத்தும் அந்த காட்சிகளை நீக்க வேண்டுமானால் அதற்கும் தயார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.