• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெக்டோனல்ட் உணவு விடுதியில் தரப்பட்ட காபியில் கரப்பான் பூச்சியின் கால்கள்

October 20, 2017 தண்டோரா குழு

பாங்காக்கில் உள்ள மெக்டோனல்ட் உணவு விடுதியில் தரப்பட்ட காபியில், கரப்பான்பூச்சியின் கால்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக் நகரில் மெக்டோனல்ட் உணவு விடுதிக்கு வாடிக்கையாளர் ஒருவர் வியாழக்கிழமை (அக்டோபர் 19) இரவு காபி அருந்த சென்றார். அவருக்கு வழங்கப்பட்ட காபியில் கரப்பான்பூச்சியின் கால்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து,அ அவர் காப்பி இயந்திரத்தில் இருந்து காபியை கோப்பைக்குள் ஊற்றுவதற்கு முன்பே அதில், கரப்பான் பூச்சியின் கால்கள் இருந்திருக்க கூடும். அதை கவனிக்காத அந்த ஊழியர் காபியை ஊற்றியிருக்க கூடும் என்று கூறி தனக்கு மற்றொரு காபியை கேட்டுள்ளார்.

ஆனால், அந்த ஊழியர் காபி இயந்திரத்தில் இருந்து வேறு ஒரு கோப்பையில் காபியை ஊற்றியபோது, அதிலும் கரப்பான்பூச்சியின் கால்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அந்த காப்பி இயந்திரத்தை சரிபார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, மெக்டோனல்ட் நிறுவனம், அந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்நிலையில்,தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை குறித்து இணையதளமான பேஸ்புக்கில் நாச்டளிசிக் ஏய்க் என்ற பெயரில் பதிவிட்டார் அந்த நபர். அவருடைய பதிவிற்கு 1,700 லைக்ஸ் மற்றும் 14,000 பேருடைய எதிர்வினைகளும் அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க