• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மு.க.ஸ்டாலினை நான்கு கேள்வி கேட்ட கருணாநிதி.

March 9, 2016 tamil.oneindia.com

திமுகவின் இறுதி நாள் வேட்பாளர் நேர்காணலில் சுவாரஸ்யமான ஒரு காட்சி அரங்கறியது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை கட்சித் தலைவரும், தந்தையுமான கருணாநிதி இன்டர்வியூ செய்து கேள்விகள் கேட்டார்.

திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தவர்களிடம் கடந்த 12 நாட்களாக நேர்காணல் நடந்து வந்தது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் திமுக சார்பில் விண்ணப்பித்திருந்த 4,362 பேரும், புதுவை – காரைக்காலில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விண்ணப்பித்த 71 பேரும் ஆக மொத்தம் 4,433 பேர் நேர்காணலில் கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்கு இறுதி நாள் நேர்காணல் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளனர். அதில் கருணாநிதி புன்னகை புரிந்தபடி கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினும் சிரித்தபடி பதிலளிக்கிறார்.

மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை கொளத்தூர் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். வரும் தேர்தலிலும் அங்கேயேதான் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க