• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழகர்களை விடுதலை செய்யக்கோரி பிஎப்ஐ அமைப்பு சார்பில் ஆர்பாட்டம்

December 28, 2018 தண்டோரா குழு

மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழகர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசை கண்டித்து கோவையில் 1000திற்கும் மேற்பட்டோர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து விடுதலை செய்து வருகின்றனர். இதையடுத்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு அந்த 7 பேர் விடுதலை சமந்தமாக ஆளுநருக்கு ஏழு பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருந்தது. ஆளுநர் அதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அந்த 7 பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிளையும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பிலிருந்து கோவை செஞ்சிலுவை சங்கம் வரை பேரணியாக வந்து தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு 7 பேர் விடுதலை மற்றும் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி அண்ணா சிலையில் இருந்து தெற்கு தாலுகா வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

மேலும் படிக்க