• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முஸ்லிம்களுக்கு “இப்தார்” விருந்து வழங்கிய இந்துக்கள்

June 2, 2017 தண்டோரா குழு

மத நல்லிணக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில், கேரளாவிலுள்ள ஒரு இந்துக் கோவிலில் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு “இப்தார்” விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கேரளா மாநிலத்தின் மல்லப்புரம் என்னும் இடத்தில் லட்சுமி நரசிம்ம மூர்த்தி விஷ்ணு கோவிலுள்ளது. தற்போது அந்த கோவிலில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதால், மே மாதம் 29ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை புனப்பிரதிஷ்டா என்னும் சடங்கு நடைபெறுகிறது.

இந்த சடங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற இப்தார் விருந்தில் சுமார் 400 இஸ்லாமியர்களும், 100-க்கும் மேற்பட்ட வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.மேலும் இந்த கோவிலின் சீரமைப்பு பணிக்கு 3௦௦ முஸ்லிம் குடும்பத்தினர் நன்கொடை வழங்கியுள்ளனர். முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் வெட்டிசிரா என்னும் இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

கோவில் கமிட்டி செயலாளர் பி.டி.மோகணன் கூறுகையில்,

“மத நல்லிணக்கத்தின் சூழ்நிலையில் நாங்கள் வளர்ந்துள்ளோம். மனிதனாக இருப்பது தான் எங்களுக்கு முக்கியம், மதம் அல்ல. தங்கள் மதத்தை அல்லது ஜாதியை பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. மற்ற மதத்தினர்களுடன் நல்ல உறவு வைத்திருக்க கூடாது என்று அர்த்தமில்லை. பிற மதத்தை சேர்ந்தவர்களை வரவேற்பதில் நம்முடைய இருதயத்தை மூடிவிடக்கூடாது.

கேரளாவின் பாரம்பரிய சைவ உணவான சாத்யா வழங்கப்பட்டது. உணவு வழங்கும் திட்டம் குறித்து அப்பகுதியில் வசித்து வந்த முஸ்லிம் மக்களுக்கு முன் கூட்டியே அறிவித்தபடியால், யாரும் எவ்வித தயக்கமும் காட்டாமல் அதிக அளவில் கலந்துக்கொண்டனர். அதை கொண்டு மகிழ்ச்சி அடைந்தோம்” என்று கூறினார்.

மேலும் படிக்க