October 21, 2017
தண்டோரா குழு
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி பற்றி தவறான கருத்துக்களை விஜய் சொல்லி இருக்கிறார் என்றும் அதனை நீக்க வேண்டுமென்றும் பிஜேபி வலியுறுத்தி வருகின்றனர்.
மெர்சல் பட விவாதம் தற்போது மாநிலத்தை தாண்டி ராகுல் காந்தி கருத்து தெரிவித்தன் மூலம் தேசிய அளவில் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் முன்னணி பிரபலங்கள் மெரசலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்⁉ இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.