• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முல்லை பெரியாரில் புதிய அணை ஏதும் கட்டவில்லைஉச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமான பத்திரம் தாக்கல்

February 11, 2019 தண்டோரா குழு

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக தமிழக அரசு கூறியது, மேலும் தமிழக அரசு கேரளா அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடர்ந்தது. தமிழக அரசு தொடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை எனவும், மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கேரள அரசின் பதிலை ஏற்ற உச்ச நீதிமன்றம் தகவல்களை திரட்ட கேரள அரசுக்கு அனுமதியளித்துள்ளது.

மேலும் படிக்க