• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முறுக்கு மீசை, தாடி.., மாறு வேடத்தில் லண்டனில் உலா வரும் நீரவ் மோடி

March 9, 2019 தண்டோரா குழு

இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடி லண்டனில் மாறுவேடத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு , கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனமான டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள வீடியோவில் நிரவ் மோடியின் சொகுசு வாழ்க்கை அம்பலமாகியுள்ளது. நிரவ் மோடி 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பிலான சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது. மேலும், லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும், சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரவ் மோடி, சர்வ சாதாரணமாக தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு, சொகுசு பங்களாவில் இருந்து அருகில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.

மேலும் படிக்க