• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை வேர்சொவா கடற்கரையிலிருந்து 16௦ டன் குப்பைகள் அகற்றம்

June 5, 2017 தண்டோரா குழு

மும்பை வேர்சொவா கடற்கரையிலிருந்து சுமார் 16௦ டன் குப்பைகளை 2௦௦௦ இயற்கை ஆர்வாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அகற்றியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் வேர்சொவா கடற்கரை உள்ளது. உலக சுற்றுசூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, அந்த கடல் பகுதியில் வசிக்கும் அப்ரோஷ் ஷா என்னும் வழக்கறிஞர் தலைமையில் சுமார் 2௦௦௦ ஆர்வலர்கள் உட்பட பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து கடற்கரையில் 3 கிலோமீட்டர் தூரம் வரை கிடந்த குப்பைகளை அகற்றியுள்ளனர். இந்த குப்பைகளின் எடை 16௦ டன் ஆகும்.

கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் தனியார் வங்கி ஊழியர்களும், மச்கோன் கப்பல் பராமரிப்பு நிறுவன ஊழியர்களும், இளைஞர் அமைப்பு உறுப்பினர்கள், அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தி சங்கம், லையன்ஸ் இன்டர்நேஷனல், ரோட்டரி, ரோட்டாராக்ட் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

இது குறித்து வழக்கறிஞர் கூறுகையில், “இது வரை சுமார் 5.6 மில்லியன் டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். கடல் மற்றும் கடற்கரையிலிருக்கும் அனைத்து குப்பைகளையும் சுத்தம் செய்யாமல் ஓயமாட்டோம்” என்றார்.

“இந்தியா கடல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்னும் திடமான செயல்பாட்டிற்கு ஐநா தொடர்ந்து ஆதரித்து, சுற்றுசூழல் விழிப்புணர்வை உயர்த்தும். பிளாஸ்டிக் பொருட்களை குறைவுப்படுத்துவதற்கும் அதற்கு மாறாக வேறு பொருட்களை பயன்படுத்த மக்கள் முன் வர வேண்டும் ” என்று ஐநா சபையின் சுற்றுசுழல் பிரிவு தலைவர் எரிக் சொல்ஹெம், கூறியுள்ளார்.

மேலும் படிக்க