• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை செம்பூர் ரயில்நிலையத்தில் தீ விபத்து

November 9, 2017 தண்டோரா குழு

மும்பையிலுள்ள செம்பூர் ரயில்நிலையத்தில் இன்று காலை நடந்த தீ விபத்தால், ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையின் செம்பூரிலுள்ள மைசூர் காலனி ரயில்நிலையத்தில் இன்று(நவ 9) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுமார் 40 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து அதிகாலையில் நடந்ததால், ரயில்நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால், யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

“மின்கசிவு காரணமாக இந்த திடீர் தீ விபத்துஏற்பட்டுள்ளது” என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க