• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு

August 19, 2019 தண்டோரா குழு

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஜெய்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடததால், இன்று அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்..
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து பாஜக எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், மாநிலங்களவை எம்.பி.மதன் லால் சைனியின் மரணத்தை அடுத்து, இந்த தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க