October 31, 2017
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33வது நினைவு தினத்தையொட்டி,புதுதில்லியிலுள்ள அவருடைய நினைவிடத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்திராகாந்தி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் ஆவார். கடந்த 1917ம் ஆண்டு, நவம்பர் மாதம் 19ம் தேதி பிறந்த இந்திரா காந்தி, கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்தை நினைவுகூரும் வகையில், மறைந்த முன்னால் பிரதமர் இந்திராகாந்திக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.