• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் காலமானார்

June 13, 2017 தண்டோரா குழு

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரூர் நடராஜன் உடல்நலகுறைவால் இன்று காலமானார்.

தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் பேரவை தலைவராக கோவை மாவட்டத்தை சேர்ந்த பேரூர் நடராஜன் இருந்து வந்தார். அவருக்கு வயது 78.

இவர் இளமை காலம் முதலே தொழிற்சங்க உறுப்பினராக தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் 1977 சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின்னர் 1984, 1989, 1996 என 4 முறை பேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணி அளவில் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது, இவரது உடல் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மொத்தம் 6 முறை தேர்தலில் போட்டியிட்ட இவர் 4 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க