August 31, 2020
தண்டோரா குழு
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூளை அறுவை சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்துள்ளார். அவருக்கு வயது 84. மேற்கு வங்கத்தில் பிறந்த அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். மத்திய நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 2012 முதல் 2017 வரை நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தார்.
2019-ஆம் ஆண்டு பாஜக அரசால் இவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.