• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு!

April 10, 2019 தண்டோரா குழு

முன்னால் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவரது மனைவி ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி மீது 1998-ல் பேருந்து மீது கல்வீசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என ஜனவரி 7-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

மேலும், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிடிருந்தார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டியின், மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார்.இவ்வேலையில் இடைத்தேர்தல் நடைபெற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார் அதில் “குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிபிட்டதொடு மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில் அவசர வழக்காக பிற்பகலில் விசாரித்த நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் தரப்பட்டது. அதில், அதிமுக வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொண்ட புகைப்படங்கள் கொண்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆதாரங்களை பார்த்த நீதிபதிகள், மனைவிக்காக கணவர் பரப்புரை மேற்கொள்ளவதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க