• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை

March 15, 2022 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லம் உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் மற்றும் அதிமுகவினரின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் இல்லம் உட்பட தமிழகத்தில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் 8 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும் சேலத்தில் 4 இடங்களிலும்,நாமக்கலில் 1 இடத்திலும், கிருஷ்ணகிரியில் 1 இடத்திலும், திருப்புத்தூரில் 2 இடம் உடபட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க