• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் எனும் தீங்கிலிருந்து பெண்களை பாதுகாக்க இஸ்லாமியர்கள் முன் வரவேண்டும் – மோடி

April 29, 2017 தண்டோரா குழு

முத்தலாக் எனும் தீங்கிலிருந்து பெண்களை பாதுகாக்க இஸ்லாமியர்கள் முன் வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் கன்னட கவிஞர் மற்றும் சீர்திருத்தவாதி பசவேஸ்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் முத்தலாக் முறைக்கு எதிராக, நவீனத்திற்கான பாதையை காட்ட வேண்டும். முத்தலாக் எனும் தீங்கிலிருந்து பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சமுதாய மக்கள் முன்வர வேண்டும்என்றும் முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாகவும் மோடி கூறினார்.

மேலும், காலாவதியான நடைமுறைகளை ஒழித்து, புதிய நடைமுறையை இஸ்லாமிய சமூகத்தினர் தொடங்க வேண்டும் என்றும், முத்தலாக் விவகாரத்தை அரசிய‌லாக்க கூடாது என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க