• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்ப்பு யானைகள் பலியாகும் அவலம்

December 24, 2016 ஊட்டி அனீஸ்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில், ஆங்கிலேயர் காலத்தில் காடுகளில் வெட்டபடும் மரங்களை எடுத்து செல்லும் வேலைக்கு யானைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமாகும்.

இம்முகாமில் காட்டில் தாயை பிரிந்த குட்டி யானை முதல் பொது மக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் காட்டு யானைகள் வரை குமகி யானைகளால் பிடித்து வரப்படுகிறது. அவ்வாறு வரும் யானைகளை முகாமில் பராமரிக்கப்பட்டும் வருகிறது. கடந்த சில வருடங்களாக யானைகள் வளர்ப்பில் வனத்துறையினர் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் விவசாய பயிர்களை சேதப் படுத்திய 5 யானைகளை வனத்துறையினர் பிடித்தனர். இவற்றில் 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண் யானைகளும், 22 வயதுடைய ஒரு பெண் யானையும் பிடிக்கப்பட்டது. இதற்கு கிருஷ்ணா, பாரதி மற்றும் நர்மதா என பெயர் சூட்டப்பட்டு பராமரித்து வந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி நர்மதா என்ற பெண் யானை வயிற்று போக்கு காரணமாக உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு யானைகள் வளர்ப்பு முகாமில் செம்மொழியான் (ரங்கா) என பெயர் சூட்டி பராமரித்து வந்தனர். ஆனால், இந்த குட்டி யானை விளையாடும் போது தவறி விழுந்ததில் முன்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமல் போனது. இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செம்மொழியான் உயிரிழந்தது.

இதன் பின் பவானி ஆற்று கரையோரம் ரங்காவுடன் மீட்கப்பட்ட 2 குட்டி யானைகளும் கடந்த 6 மாதங்களுக்கு முன் பவானி ஆற்றின் அருகே மீட்கப்பட்ட மற்றொரு குட்டி யானையும் கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் காயமடைந்த யானையும் தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் யானைகள் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது.

இப்படி தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகள் இறப்பால் 27 யானைகளிலிருந்து தற்போது 23 யானைகளாக எண்ணிக்கை குறைந்துள்ளது. குட்டியானை வளர்ப்பில் உள்ள பிரச்சனைகளை பற்றி முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் இ.விஜயராகவனிடம் கேட்டபோது,
“காட்டில் தாயிடமிருந்து பிரியும் குட்டி யானைக்கு தாய் பால் கிடைக்காமல் போய் விடுகிறது. தாய் பாலில் தான் குட்டி யானையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நாங்கள் பால்பவுடர், முட்டையின் வெள்ளைக்கரு, விளக்கெண்ணெய், நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய டானிக் ஆகியற்றை கலந்து கொதிக்க வைத்து நன்றாக ஆறிய பின்னரே குட்டி யானைக்கு தருகிறோம். இருந்தாலும் தாய் பாலில் கிடைக்கும் சத்துக்கள் கிடைக்காமல் குட்டியானை இறந்து விடுவது தவிர்க்க முடியாமல் போகிறது என்றார்.

வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் என். சாதிக் அலி கூறுகையில், “முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கான மருத்துவமனையின் உட்கட்டமைப்பு போதிய அளவு இல்லை. இங்கு நோயால் பாதிக்கப்பட்டு கொண்டு வரும் யானைகளை கீழே படுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இதற்கென்று பிரத்யேகமாக பெல்ட் அமைப்பு உள்ளது. அந்த பெல்ட் அமைப்பு உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்ககளை அரசாங்கம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும். அதைபோல் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தினால் வளர்ப்பு யானைகளின் இறப்பை தடுக்கலாம் என்றார்.

மேலும் படிக்க