May 16, 2017
தண்டோரா குழு
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான 7.63 கிலோ மீட்டர் தொலைவுள்ள அந்த வழித்தடத்தில் முதல் நாளன்றே அதில் 40 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் 21-ம் தேதிவரை மெட்ரோ ரயில் சேவை கட்டணத்தில் 40 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்க பாதை மெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோடை விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள், அதிக அளவு பயணித்து வருகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை மேன் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.