• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் பிறந்தநாள்: சக்தி நகரில் கொடிகம்பம் நடும் விழா : கட்சி தொண்டர்கள் உற்சாகம்

March 1, 2023 தண்டோரா குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.இதனையொட்டி இந்தியா அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள்,கட்சி தொண்டர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் நம்பர் 4. வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியில் புதியதாக கொடிகம்பம் நடப்பட்டு திமுக கொடி ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கவுன்சிலர் சித்ரா தேவி, நிர்வாகி உதயணன் முன்னிலையில் நடந்தது. இதில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க