April 23, 2020
தண்டோரா குழு
முதல்வர் நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.2 கோடி நிதி
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (LMW) ரூ. 2 கோடி கொரோனாவை எதிர்த்து போராட நிதியளித்தது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா தொற்றை எதிர்த்து போராட தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு ரூ.2 கோடி நிதி அளித்தார். இதற்கான காசோலையை தமிழ்நாடு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு மற்றும் சிறப்பு அமலக்க திட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம்,கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.