• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு – அதிமுக நிர்வாகி கைது

September 7, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டகோவை மாவட்ட அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட நான்கு பிரிவுகளில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.அதிமுக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க