• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வரை விட தலைமைச் செயலரை சந்திப்பதே தற்போது சவாலாக உள்ளது – உ.வாசுகி

February 8, 2019 தண்டோரா குழு

கடந்த காலத்தில் முதல்வரைச் சந்தித்து தான் சிரமமாக இருக்கும் தற்போது தலைமைச் செயலரை சந்திப்பதே சவாலாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவருமான உ.வாசுகி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சில்லறை மதுபானகடைகள் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளதில் நம்பிக்கை இல்லை. சமீபத்தில் தமிழக அரசு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழக்கியது. இதில் பல பேருக்கு கிடைக்கவில்லை என்கிற விமர்சனம் இருந்தாலும் மறுபுறம் செலவழித்த நிதியை காட்டிலும் கூடுதலாக டாஸ்மாக்கிலிருந்து வருமானத்தை பெற்றுள்ளது என்பது வேதனையான விஷயமாகும். இடது கையில் கொடுத்துவிட்டு வலது கையில் பிடுங்குவது என்பதே அரசின் கொள்கையாக உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்கிற வாக்குறுதி அளித்த பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் பல லட்சம் வேலை வாய்ப்பு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாக அறிவித்து நாடகமாடுகிறார். 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு வேலையின்மை கொடுமை அரங்கேறி வருகிறது. மறுபுறம் வேலையின்மை குறித்த கணக்கெடுப்பை வெளியிடாமல் மோடி அரசு தடுத்து வருகிறது. 10 கோடி பேருக்கு வேலை கொடுத்தாக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றவில்லை வேலையின்மை குறித்த ஆண்டு அறிக்கை வெளியிடப்படாமல் மத்திய அரசு தடுத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் வேலையிண்மை ஏற்பட்டுள்ளதாக சில ஆய்வு அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. வேலையின்மையால் மிக பெரிய கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் அதிக முதலீடுகள் வந்துள்ளதாக கூறும் தொழில்துறை அமைச்சர் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட
வேண்டும் என வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விஷாகா கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதம் ஒரு முறை காவல்துறையினர் மாதர் சங்கம், பெண்கள் இயக்கம் இடையே சந்திப்பு கூட்டம் நடத்த ஆட்சியருக்கு வலியுறுத்த உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் ஆட்சி நடத்துகிறார்களா அல்லது தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆட்சி செய்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தலைமைச்செயலாளரை சந்திக்க ஐந்து முறை கடிதம் எழுதியும் இதுவரை நேரம் கொடுக்கவில்லை. கடந்த காலத்தில் முதல்வரைச் சந்தித்து தான் சிரமமாக இருக்கும் தற்போது தலைமைச் செயலரை சந்திப்பதே சவாலாக உள்ளது என்றார்.

மேலும் படிக்க