• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘முதல்வன்’ பட பாணியில் ஒரு நாள் பிரதமரான 5 வயது சிறுமி !

May 29, 2017 தண்டோரா குழு

கனடாவில் 5 வயது சிறுமிக்கு ஒரு நாள் பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ள சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கனடாவில் ஒரு நாள் பிரதமராக குழந்தைகளுக்கு கட்டுரை போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் பெல்லா என்னும் 5 வயது சிறுமி வெற்றி பெற்றாள். அவள் கனடா நாட்டின் மனிடோபா மாகணத்தை சேர்ந்தவள்.

அவள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கனடா நாட்டின் பிரதமராக தற்போதைய பிரதமர் ஐஸ்டின் டிருயூவின் அலுவலகத்திற்கு சென்றாள்.அவளை பிரதமர் அன்புடன் அழைத்து சென்று தன் இருக்கையில் உட்கார வைத்தார்.

இதனிடையே ஒரு நாள் பிரதமரான பெல்லாவின் உத்தரவுகளை தற்போதைய பிரதமர் நிறைவேற்றினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரதமராக பதவியேற்ற பெல்லா கூறுகையில்

“ கனடா நாட்டின் பிரதமர் என்ற முறையில், அனைவருக்கும் வீடும் பாதுகாப்பும் கிடைக்க பணி செய்வேன். அனைவரையும் அன்புடன் அணைத்துக்கொள்வேன். விலங்குகளும், நம்மை சுற்றியுள்ள உலகமும் பாதுகாப்பாக வைக்கப்படிருப்பதை உறுதி செய்வேன். கனடா நாட்டின் ஒவ்வொரு கனடியனும் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்வேன்.அனைவருக்கும் இரக்கம் காட்டுவேன்” என்றாள்.

மேலும் படிக்க