• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலீட்டாளர்கள் மாநட்டில் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன – முதல்வர் பழனிச்சாமி

January 24, 2019 தண்டோரா குழு

முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றன. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி
பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளால் தமிழகத்தில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சுமார் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டை விட 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அடுத்த உலக மூதலீட்டாளர் மாநாடு 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தமிழக அரசுடன் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

* ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்தானது
* சிபிசிஎல் நிறுவனத்துடன் ரூ.27,400 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
* பிரபல நிறுவனத்துடன் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது
* ரூ.23 ஆயிரம் கோடிக்கு என்.எல்.சி.நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
* ஐசெர் நிறுவனத்துடன் ரூ.1500 கோடி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
* ரூ.3,100 கோடிக்கு எம்ஆர்எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
* ரூ.1,250 கோடிக்கு பிஎஸ்ஏ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
* சாய் பல்கலைக்கழகத்துடன் ரூ.580 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
*அலைன்ஸ் நிறுவனத்துடன் ரூ.9,488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது
* எம்.எஸ்.எம்.இ என்ற 12 ஆயிரம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க