• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இதில் என்ன கவுரவம்? – முக.ஸ்டாலின் கேள்வி

January 26, 2019 தண்டோரா குழு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் பழனிசாமி கவுரவம் பார்க்காமல் இறங்கி வந்து, அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ – ஜியோ அமைப்பினர் நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று இரவு பல்வேறு அவ்வமைப்பை பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது, மிரட்டுவது போன்றவை போராட்டத்தை மேலும் தூண்டிவிடும் கேடுதரும் வழிகள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், பல காலமாக தங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இந்த அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது. நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலிக்காமல், விழாக்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதுடன், எச்சரிக்கை விடுவதில் மட்டும் தலைமைச் செயலர் கவனம் செலுத்துவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை விடுவிப்பதுடன், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையை ஏவி இரவோடு இரவாக கைது செய்வது அராஜகத்தின் உச்சகட்டம்! அவர்களை நேரில் அழைத்துப்பேசி சுமூக தீர்வுகாண முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இதில் என்ன கவுரவம்? என கூறியுள்ளார்.

மேலும் படிக்க