• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி

January 20, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் திட்ட பணியாளர்களுக்கு ஆவாரம்பாளையம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வழங்கப்பட்டது.

அப்பயிற்சியில் உணவிற்கான மூலப் பொருள்களை எவ்வாறு வாங்குவது, இருப்பு வைப்பது, மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் தயாரிக்கப்பட்ட உணவை எவ்வாறு கொண்டு செல்லுதல், கையாளுதல் மற்றும் பரிமாறுவது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேலும் அவர்களுக்கு தன் சுத்தம் பற்றியும் கையுறை, தலையுறை மற்றும் மேலங்கி போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும், உணவுப்பொருளில் கலப்படங்கள் பற்றியும் விரிவாக பயிற்சி கொடுக்கப்பட்டது.

இப்பயிற்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கல்வி குழு தலைவர் மாலதி, மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம், எப்.ஓ.எஸ்.டி.ஏ.சி (FoSTaC) பயிற்சியாளர் பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க