August 14, 2020
தண்டோரா குழு
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் துறையில் ஒரு முன்னனி நிறுவனமாகும்.இந்நிறுவனத்தின் முக கவசங்கள், தற்காப்பு உடைகள் உள்நாட்டில் மட்டுமல்லாது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.
இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ஆன்டி வைரஸ் முக கவசம் வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்றுகளில் இருந்து 99.01 % சதவிகிதம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலும் நம்மை அச்சுறுத்தி வரும் கொரோன போன்ற எந்தவிதமான தொற்று கிருமிகளையும் இம்முகக்கவசத்தின் மீது பட்ட உடனே செயல் இழக்க செய்யும் வகையிலும் ஸ்விஸ் ரசாயன தொழில் நாட்டு நுட்பத்துடன் இணைந்து இந்தியாவில் முதன்மையாகவும் தனித்துவமாகவும் பிரத்தியேகமாகவும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனையாகிவரும் இம்முகக்கவசம் சலவை செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல் துறையினரின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல் துறையினருக்கென்று பிரத்தியேகமாக அவர்களுடைய சீருடை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 5000ம் முகக் கவசங்களை கோவை நகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் ஐபிஎஸ் அவர்களிடம் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் நேரில் வழங்கினார்.
அப்போது அவர் கோவை நகரில் இரவு பகல் பாராது பணியாற்றி வரும் காவலர்களுக்கு இச்சூழ்நிலையில் இத்தகைய முகக் கவசம் மிகவும் பயனுள்ளது என்றும் காவலர்கள் பொதுவெளியில் பாதுகாப்புடனும் கொரோனா தொற்று அச்சமின்றியும் பணியாற்ற ஏதுவாக முகக்கவசம் உதவும் என்றும் தெரிவித்தார். அவர்களுடன் காவல் துறை உயர் அதிகாரிகளும் நிறுவனத்தினரும் உடனிருந்தார்.