May 5, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்களை தவறாமல் அணிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசங்களை கழற்றக் கூடாது. மேலும், முகக்கவசங்கள் அணியாதவர்கள் மற்றும் முகக்கவசங்களை கழற்றி விட்டுச் செல்பவர்கள் மீது ரூ.100/- அபராதம் விதிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இதனை தவறாமல் அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.