July 23, 2020
தண்டோரா குழு
வரும் ஆகஸ்ட் ஒண்பதாம் தேதி சஷ்டியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுளிலும் கந்தசஷ்டி கவச புத்தகங்களை வழங்கி அதன் சிறப்புகளை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என கோவையில் காமாட்சி புரி ஆதீனம் தெரிவித்துள்ளார்.
‘கருப்பர் கூட்டம் ‘ என்ற , யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ,ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்து வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அதன் விவகாரம் தமிழகத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடவுளை பற்றி ஆபாசமாக சித்திரித்தவர்களை கண்டித்தும் இனி இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள காமாட்சி புரி ஆதினம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் மற்றும் பா.ஜ.க மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது காமாட்சி புரி சுவாமிகள் பேசுகையில்,
உலகம் முழுவதும் முருக பக்தர்கள் வாழ்வாங்கு முருக வேலை வணங்கி வருவதாகவும் அதனை சீர் குலைக்கும் வகையில், ஆபாசமாக சித்தரித்தது கடும் கன்டிக்கதக்கது எனவும், மற்ற மதங்களை யாரேனும் இழிவுபடுத்தும் பொழுது அந்த மதத்தினர் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் ஆனால் இந்து மதத்தை இழிவு செய்யப்படும் பொழுது பலர் ஒதுங்கிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார் இந்த நிலை மாறவேண்டும் இந்துக்களுக்கு ஒரு இழுக்கு என்றால் அனைவரும் முன்னால் நிற்க வேண்டும் அதுவே இந்துதர்மம் எனவும் தெரிவித்துள்ளார் மேலும் அனைவரது வீடுகளிலும் தற்பொழுது முகக்கவசம் அணிகிறார்களோ இல்லையோ கந்த சஷ்டி கவசம் தினமும் கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார் மேலும் கந்த சஷ்டி கவசத்தையும், முக கவசத்தையும் ஆகஸ்ட் 9ஆம் தேதி சஷ்டி நாளான அன்று அனைத்து முருக பக்தர்களின் வீடுகளுக்கும் வழங்க இருப்பதாக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.