• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை – நடிகர் கமல்ஹாசன்

February 21, 2018 தண்டோரா குழு

மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இதனையடுத்து ராமேஸ்வரத்தில் நடிகர் கமல்ஹாசனை மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர்.பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு, நிறைவேற்றாதபோது கேள்வி கேட்டால் அதை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது. மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை என்றும், மீனவ பிரச்னைகளை தீர்க்கும் வாய்ப்பை தனக்கு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன் என்றார்.

 

மேலும் படிக்க