• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி

July 7, 2020 தண்டோரா குழு

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் 750 படுக்கை வசதிகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து இன்று முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழக அரசிடம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறைளயில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கிண்டி கிங்ஸ் மருத்துவமனை எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளுக்கு இணையாக இருக்கும்.

சென்னையில் வீடு வீடாகச் சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அதே சமயம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதும் அவசியம். கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி. இத்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறப்பான கொரோனா தடுப்பு முறை உள்ளது.மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. பொதுமக்கள் மாஸ்க் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். அரசின் நிதிநிலைக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க