September 12, 2020
தண்டோரா குழு
மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த, காவல் உதவி ஆய்வாளர் மகள் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பலரும் மாணவிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
#NEET அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி!
#NEET மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது.
மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல! என்று பதிவிட்டுள்ளார்.