• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் சாமானியர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார் – எஸ்.பி.வேலுமணி !

April 4, 2021 தண்டோரா குழு

உள்ளாட்சிதுறை அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணி கோவை சுகுனாபுரம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர்,

கோவை மாவட்ட மக்கள், மற்றும் திருப்பூர் நீலகிரி மக்களுக்கும் வணக்கம், கோவை மாவட்டத்தில் அவினாசி சட்டமன்ற தொகுதியையும் சேர்த்து 11 சட்டமன்ற தொகுதிகளிலும், மாபெரும் வளர்ச்சுயை கொடுத்துள்ளோம். அம்மாவின் மரணத்திற்கு பிறகு, எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, மேம்படுத்த பட்டுள்ளது.

மேலும் கோவையில் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பாக கோவையில் 10 கி.மீட்டர் நீளத்திற்க்கு மிகப்பெரிய பாலத்தின் பணிகளை கொண்டுவந்துள்ளோம்.விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உறுவாகும் வாய்ப்புள்ளது. அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமான அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

அரசு மருத்துவமனையில் மேரம்படுத்தப்பட்ட கட்டமைப்பை உறுவாக்க்கியுள்ளோம். கோவையில்,6 அரசுகல்லூரிகளை கொண்டுவந்து இன்று ஏழை எளிய மக்கள் 1500 கட்டணத்தில் பயனடைந்து படித்து வருகிறார்கள். கோவையில் சட்டம் ஒரழுங்கு சிறபாக உள்ளது எங்கேயும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற பிறச்சினைகள் இல்லை,தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரியை பெற்று தந்துள்ளோம், அதில் நீககிரி, மற்றும் திருப்பூர் என இரண்டு கல்லூரியை நமது பகுதிக்கு பெற்றுள்ளோம்.

ஒரு சாமானியர் விவசாயி நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.ஓடுபோட்ட மக்களை ஏமாற்றாமல் மனசாட்சியுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் வாஷிங் மிசின் உட்பட பலதிட்டங்களை அறிவித்துள்ளார். திமுக வை சேர்ந்தவர்கள் தான் தவறான நடவக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக வினர் மிகவும் நேர்மையானவர்கள்.மீண்டும் சாமானியர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார், என்று தெரிவித்தார்.

இந்த செதியாளர்கள் சந்திப்பில் குரும்பா சமூக கூட்டமைப்பை சேர்ந்த சங்க நிர்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.தொடர்ந்து திமுகவினர் பத்திரிக்கையாளர்களை தாக்கி வருவருவது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க